பெங்களூருவில் காதலித்தவனையே கைபிடிக்க இருந்த நிலையில், ஒரு ஜோதிடரின் கணிப்பால் இளம்பெண் வித்யாஜோதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான வித்யாஜோதி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் ஒரு ஜோதிடர் இவர்களது ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால் மணவாழ்க்கை கசக்கும் என்றும், நிச்சயம் விவாகரத்தில் முடியும் என்றும் கூறியுள்ளார்.

​ஜோதிடரின் பேச்சை உண்மை என நம்பிய வித்யாஜோதி, அந்தத் தடையைப் போக்க 9 நாட்கள் கடுமையான பரிகார பூஜைகளைச் செய்துள்ளார். ஒன்பது நாட்களும் மன உளைச்சலில் இருந்த அவர், பரிகாரத்தின் இறுதி நாள் பூஜை முடிந்த கையோடு தனது அறைக்குள் சென்று தற்கொலை செய்துகொண்டார். திருமணக் கனவில் இருந்த குடும்பத்தினரும் காதலனும், அந்தப் பெண்ணின் இந்த விபரீத முடிவால் நிலைகுலைந்து போயுள்ளனர்.