திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மிக அருகிலேயே சிறிய சலவை கடை (Laundry) நடத்தி வருபவர் ஒரு முதியவர். இவருக்கு இரண்டு மாற்றுத்திறனாளி மகன்கள் உள்ளனர். தனது தள்ளாத வயதிலும், மாற்றுத்திறனாளி மகன்களின் வாழ்வாதாரத்திற்காக இரவு பகலாக உழைத்து வரும் இந்த மூதாட்டியின் கடையில் இருந்த விலை உயர்ந்த சலவை பெட்டிகளை (Iron Boxes) மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர்.
காலையில் கடைக்கு வந்த மூதாட்டி, சலவை பெட்டிகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். “காவல்துறை அலுவலகத்திற்கு எதிரிலேயே இப்படி ஒரு திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ” என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மூதாட்டியின் சலவை கடையில் இருந்த சலவை பெட்டிகள் திருட்டு… செய்வதறியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி மகன்களுடன் சலவை கடை நடத்திவரும் மூதாட்டி.! காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே துணிகரம்.!#Dindigul | #SpeciallyAbled | #Laundry | #IronBox | #Theft | #Police | #PolimerNews pic.twitter.com/XXkyoRxghl
— Polimer News (@polimernews) March 3, 2026
“>
பிழைப்பிற்கு ஆதாரமாக இருந்த சலவை பெட்டிகளை இழந்ததால், தனது மகன்களுக்கு உணவு அளிக்கக் கூட வழியின்றி அந்த மூதாட்டி செய்வதறியாது தவித்து வருகிறார்.
