டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன் மூலம் இந்திய அணி 6-வது முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்தியாவின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் அதிரடியான சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்திய அணி இன்னும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்றும், ஜஸ்பிரித் பும்ராவை மட்டுமே அந்த அணி நம்பியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“>

 

ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி அதிக ரன்களைக் கொடுப்பதாகக் குறிப்பிட்ட அமீர், இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராகச் சுழற்பந்து வீச்சாளர்கள் திணறுவார்கள் என்றும், அதனால் இந்தியா இன்னும் இந்தத் தொடரை வெல்லும் ‘ஹாட் பேவரிட்’ அணி இல்லை என்றும் வாதிட்டுள்ளார்.