தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் முன்னணி நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா நடிகர் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தன்னுடைய கணவர் பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்த விவகாரம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனக்கு தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உறவை கைவிடுமாறு பலமுறை கூறியும் விஜய் கேட்காததாகவும் அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட சங்கீதா விஜய் தன்னுடைய தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக தன்னை ஒதுக்கி விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவை சமூக வலைதளத்தில் அவரின் ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது நடிகர் விஜய்க்கு மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சோசியல் மீடியாவில் சங்கீதாவை மோசமாகவும் ஆபாசமாகவும் சித்தரித்து விமர்சிக்கும் நிலையில் விஜய் அமைதியாக இருப்பது இதனை மறைமுகமாக ஆதரிப்பது போலவே உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் சங்கீதாவை குறி வைத்து ஆபாசமான, இழிவான, ஆணாதிக்க வன்முறை பதிவுகள் மற்றும் கேலிச்சித்திர வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இது கருத்து சுதந்திரம் அல்ல டிஜிட்டல் வன்முறை என்று மாதர் சங்கம் சாடியுள்ளது.
