சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் காவல் விசாரணையில் உயிரிழந்த வழக்கில், வரும் மார்ச் 23-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் காவல் விசாரணையின்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நீண்ட விசாரணைக்கு பிறகு, வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.