ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த கோரத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.
மேலும் ஈரானின் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர் மற்றும் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடுத்து வருவதால் அந்தப் பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த படுகொலைச் சம்பவம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிரிழந்த தலைவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள புதின், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் எச்சரித்துள்ளார்.
வல்லரசு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு சர்வதேச உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
