மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், ஒரு நபர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் மனைவி, தனது கணவனின் ஆண்மையை ஏளனம் செய்து அடிக்கடி அவதூறாகப் பேசி வந்துள்ளார்.
மேலும் “உனக்குப் பிறந்த குழந்தைகள் உன்னுடையது அல்ல” என்று கூறி அவரை மனரீதியாகப் பாதிப்படையச் செய்ததோடு மட்டுமல்லாமல், தனது தாய் மற்றும் சகோதரரின் உதவியுடன் அந்த இளைஞரைத் தாக்கி அநாகரீகமான முறையில் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தியுள்ளார்.
இந்த கொடூரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத் தகராறு இவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து ஒரு இளைஞரை இப்படிச் சித்திரவதை செய்திருப்பது சமூக வலைதளங்களில் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
