மகாராஷ்டிராவின் மெல்காட் புலிகள் காப்பகத்தில் இயற்கையை நேசிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு அரிய வனவிலங்கு மோதல் நிகழ்ந்துள்ளது. உணவிற்காக அல்லது எல்லைப் பகுதிக்காக ஒரு கரடியும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பொதுவாக சிறுத்தைகள் மிகவும் சுறுசுறுப்பானவை மற்றும் வலிமையானவை என்று கருதப்பட்டாலும், இந்த மோதலில் கரடி தனது அபாரமான பலத்தைக் காட்டியது.

மேலும் கரடி தொடுத்த ஒரே ஒரு ஆக்ரோஷமான தாக்குதலில், சிறுத்தை நிலைதடுமாறிப் போனது. வனப்பகுதியில் நடந்த இந்த சிலிர்ப்பூட்டும் காட்சியைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by civicmirror (@civicmirrorpune)

“>

இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஒரு வலிமையான வேட்டையாடும் விலங்கான சிறுத்தையை, கரடி தனது உடல் வலிமையால் எவ்வாறு அடக்கியது என்பதை இந்த வீடியோ தெளிவாகக் காட்டுகிறது.

இந்நிலையில் காட்டில் உயிர் பிழைப்பதற்கான போராட்டம் எவ்வளவு கடினமானது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். காட்டின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் அங்குள்ள விலங்குகளின் முரட்டுத்தனமான வாழ்க்கை முறையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.