உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், சடங்குகள் செய்வதற்காக டிஜே இசையை நிறுத்துமாறு பெண் வீட்டார் கோரியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை தரப்பினர், பெண் வீட்டாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சிறிய தகராறு சில நிமிடங்களிலேயே பெரும் கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி அனைவரும் ஒருவரை ஒருவர் கைகளால் குத்தியும், கால்களால் உதைத்தும், பெல்ட்டுகளைக் கொண்டு தாக்கியும் கொண்டனர்.

“>

இந்நிலையில் திருமண மண்டபமே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த அதிர்ச்சியூட்டும் வன்முறை காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது, தற்போது இது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.