மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய வீட்டின் அடித்தளத்தில், சுமார் 15 அடி ஆழத்தில் புதையல் இருப்பதாக பரவிய தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீட்டின் உரிமையாளர் கட்டுமானப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது, அங்கே தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அடங்கிய பானைகள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்தத் தகவல் காட்டுத்தீயாக பரவியதைத் தொடர்ந்து, அந்த ‘தங்கச் சுரங்கத்தைப்’ பார்க்கவும், அதில் பங்கு கிடைக்குமா என அறியவும் உள்ளூர் மக்கள் அங்கு பெருமளவில் திரண்டனர். மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by ZEE 24 TAAS (@zee24taas)

“>

மேலும் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், அது ஒரு பழங்கால நிலவறை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அங்கு உண்மையில் தங்கம் மற்றும் வெள்ளி இருந்ததா அல்லது அது வெறும் வதந்தியா என்பதை கண்டறிய தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் சீல் வைக்கப்பட்டு, சட்டவிரோதமாக யாரும் நுழையாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.