தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது ஆளுமை குறித்து மேடை ஒன்றில் பேசிய பெலிக்ஸ், பிற முன்னணி நடிகர்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

“உச்சம் தொட்ட நடிகர்கள் பலரும் செய்யத் துணியாத காரியத்தை விஜய் செய்துள்ளார்” எனக் குறிப்பிடும்போது, பிற நடிகர்களின் ரசிகர்களைப் புண்படுத்தும் விதமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, குறிப்பாக அஜித் ரசிகர்கள் பெலிக்ஸின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“>

 

“அரசியலுக்கு வந்துள்ள விஜய், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என விரும்பும் வேளையில், இதுபோன்ற நிர்வாகிகள் மற்ற ரசிகர்களைச் சீண்டுவது கட்சிக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும்” எனச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.