தெலுங்கு திரையுலகின் ‘மோஸ்ட் வான்டட்’ ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘ரணபாலி’ (Ranabali) படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாடலான “ஏதயய்யா சாமி” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மென்மையான மெலோடி ரகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல், வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது ‘ரணபாலி’ படத்தின் பாடலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இப்பாடலில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Our RANABAALI and JAYAMMA ✨
Together, forever ❤️Celebrating their love with this special surprise 🫶
▶️https://t.co/xP8wO1eYhB#EndhayyaSaami – Telugu#YedhayyaSaami – Tamil#EntheKannaala – Malayalam#EnayyaSaami – Kannada#OMereSaajan – Hindi#Ranabaali Grand release… pic.twitter.com/wDf5QGYMFZ— Ramesh Bala (@rameshlaus) February 28, 2026
“>
