உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வரில் மாவட்ட மருத்துவமனையை ஆய்வு செய்ய வந்த குமாவுன் கமிஷனர் தீபக் ராவத்திடம், 80 வயது முதியவர் ஒருவர் தனது குறைகளை ஆங்கிலத்தில் அடுக்கினார். “மும்பை கோத்ரேஜ் நிறுவனத்தில் இன்ஜினியராக இருந்தவன் நான்” என்று கம்பீரமாகத் தொடங்கிய அவர், தனது மனைவிக்கு சிறுநீரகக் கல் பாதிப்பு இருந்தும், ஹல்துவானி தனியார் மருத்துவமனை ‘ஆயுஷ்மான் கார்டை’ ஏற்க மறுத்து சிகிச்சையை நிராகரித்ததாகக் குற்றம் சாட்டினார்.
A video from the Kumaon Commissioner’s visit to Bageshwar is going viral, showing an elderly man directly complaining about not receiving treatment under the Ayushman scheme. Many people online seem more surprised that he spoke in English. But the real story is not the language… pic.twitter.com/k8x5BJVDvA
— Kumaon Jagran (@KumaonJagran) February 25, 2026
அவர் பேசிய சரளமான ஆங்கிலத்தைக் கேட்டு அங்கிருந்த அதிகாரிகள் முதல் சமூக வலைதளவாசிகள் வரை அனைவரும் வாயடைத்துப் போயுள்ளனர். “அறிவும் படிப்பும் இருந்தால் யாரையும் கேள்வி கேட்கலாம்” என்பதற்கு இந்தப் பெரியவர் ஒரு சிறந்த உதாரணம் எனப் பாராட்டுகள் குவிகிறது.
