இன்றைய காலகட்டத்தில் கார் வைத்திருப்பவர்களுக்கு பார்க்கிங் கட்டணம் என்பது ஒரு பெரிய தலைவலியாகவே உள்ளது. இதிலிருந்து தப்பிக்கப் பலரும் பல வழிகளைப் பின்பற்றுவார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் உள்ள நபர் செய்த காரியம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. அந்த நபர் தனது காரை நிறுத்திவிட்டு, அதன் அடியில் இரண்டு ‘டம்மி’ கால்களை (Fake Legs) நீட்டி வைத்துள்ளார். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு யாரோ காரின் அடியில் படுத்து ரிப்பேர் வேலையில் ஈடுபட்டிருப்பது போலவே தோன்றும். இந்த செட்டப் மூலம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பவர்களிடம் இருந்து மிக சாதுரியமாக அவர் தப்பித்து விடுகிறார்.

​இந்த 18 வினாடி வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “இது என்ன மாதிரியான ஐடியா? நெக்ஸ்ட் லெவல் புத்திசாலித்தனம்” என நெட்டிசன்கள் ஒருபுறம் பாராட்டி சிரித்தாலும், மற்றொரு தரப்பினர் “அந்தப் பொம்மை கால்களே திருடு போயிடும் போலிருக்கே!” என கிண்டலடித்து வருகின்றனர். எது எப்படியோ, பார்க்கிங் டிக்கெட் எடுக்காமல் இருக்க அந்த நபர் காட்டிய ‘கில்லாடி’ வித்தை இப்போது உலக அளவில் டிரெண்டாகிவிட்டது.