ராஜஸ்தான் மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளி இடைவேளையின் போது தனது நண்பர்களுடன் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி, திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்துள்ளார்.
In a tragic incident, a 9-year-old child reportedly died after suffering a suspected heart attack while playing in the school playground. The child suddenly collapsed during recess and was rushed for medical attention, but could not be saved. The incident has left the school… pic.twitter.com/RZTZXIZIFZ
— NewsX World (@NewsX) February 26, 2026
ஆசிரியர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணத்தில் உள்ள மிகப்பெரிய சோகம் என்னவென்றால், இதே குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமியின் தம்பியும் சரியாக 4 மாதங்களுக்கு முன்பு இதேபோல் விளையாடிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஒரே வீட்டில் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் அடுத்தடுத்து மாரடைப்பால் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே கண்ணீரில் நனைய வைத்துள்ளது. இது மரபணு குறைபாடா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
