விமான பயணிகளுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, நீங்கள் ஒரு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் அதை ரத்து செய்தால், ரத்து கட்டணம் (Cancellation Fee) ஏதுமின்றி முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
பொதுவாக, டிக்கெட்டை ரத்து செய்யும் போது பெரும் தொகை பிடித்தம் செய்யப்படும் நிலையில், இந்த புதிய விதிமுறை பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இருப்பினும், இந்தச் சலுகையைப் பெற ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் தேதியானது, விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக இருக்க வேண்டும்.
கடைசி நேரத்தில் (7 நாட்களுக்குள்) டிக்கெட் எடுத்துவிட்டு ரத்து செய்தால் இந்தச் சலுகை பொருந்தாது. விமான நிறுவனங்கள் பயணிகளை ஏமாற்றுவதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி டிக்கெட் எடுக்கும்போது தப்பு நடந்துவிட்டாலும் அல்லது பிளான் மாறினாலும் டென்ஷன் ஆக வேண்டிய அவசியமில்லை!
