தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காணத் தயாராகி வருகிறது. இந்நிலையில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இனிவரும் காலங்களில் தலைமைக் கழகத்தின் முறையான அனுமதியின்றி, நிர்வாகிகள் யாரும் எவ்விதமான தொலைக்காட்சி விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் அல்லது சமூக ஊடக நேர்காணல்களில் பங்கேற்கக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, யூடியூப் போன்ற தளங்களில் தன்னிச்சையாகக் கருத்து தெரிவிப்பது சர்ச்சைகளை உருவாக்கலாம் என்பதால், முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கவும், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைச் சரியாகக் கொண்டு சேர்க்கவுமே இந்த அதிரடி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
