தற்போதைய நிலவரப்படி, இன்று நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியைத் தோற்கடித்தால் தென்னாப்பிரிக்கா அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். இந்திய அணியைப் பொறுத்தவரை, அடுத்ததாக மோதவுள்ள ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்தினாலே போதும், எந்தவிதச் சிக்கலுமின்றி அரையிறுதிக்கு முன்னேறிவிடலாம்.

​ஆனால், ஒருவேளை இன்று வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுவிட்டால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கடினமாகிவிடும். அந்தச் சூழலில், தென்னாப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயிடம் தோற்க வேண்டும். அதே சமயம், இந்திய அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். அப்போதுதான் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் இந்தியாவால் அரையிறுதிக்குச் செல்ல முடியும். இதனால் இன்றைய போட்டியின் முடிவு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.