தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாமல் இழுபறியில் நீடித்து வருகிறது. தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகளில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தற்போதைய கூட்டணியில் ஒருவித தொய்வு ஏற்பட்டுள்ளது.

​இந்நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் தலைமை மிகுந்த திருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.