டி20 உலகக்கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்றதைத் தொடர்ந்து, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தொலைக்காட்சியில் ஆவேசமாகப் பேசியுள்ளார். போட்டிக்கு முன்பு, “இந்தியா தொடரை விட்டு வெளியேற வேண்டும், இங்கிலாந்து தோற்று பாகிஸ்தானுக்குப் புள்ளிகள் கிடைக்க வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் அக்தர். ஆனால், களத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் சதம் அடித்து பாகிஸ்தானைத் தோற்கடித்தது, அக்தரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
தோல்விக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அக்தர், பாகிஸ்தான் கேப்டன் அகா சல்மானின் தலைமைப் பண்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவு அளித்த அக்தர், இப்போது அவர் கேப்டன் பதவிக்குத் தகுதியானவர் தானா என கேள்வி எழுப்பியது வைரலாகி வருகிறது. மறுபுறம், “ப்ரூக் எப்போதும் எங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்” என்று ஒப்புக்கொண்ட கேப்டன் அகா சல்மான், அரையிறுதிக்குச் செல்ல இன்னும் 1% வாய்ப்பு இருந்தாலும் அதற்காகப் போராடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
