சமூக வலைதளங்களில் எப்போது என்ன வீடியோ வைரலாகும் என்று சொல்ல முடியாது, ஆனால் சில வீடியோக்கள் நம் இதயத்தை அப்படியே உருக்கிவிடும். அந்த வகையில் தற்போது ஒரு குட்டி பையனுக்கும், அவனது வீட்டு நாய்க்கும் இடையிலான பாசப் போராட்ட வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு சிறுவன் சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் அவனது தாய், ஏதோ காரணத்திற்காக அந்தச் சிறுவனை ஆக்ரோஷமாகத் திட்டத் தொடங்குகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Ashwita Dombale (@dombaleashwita)

தனது குட்டி எஜமானைத் தாய் திட்டுவதைப் பார்த்த அந்த வளர்ப்பு நாய், உடனே ஓடி வந்து சிறுவனுக்கும் தாய்க்கும் நடுவில் ஒரு கேடயம் போல நின்றது.

தன் வாயால் சிறுவனை அணைத்துக் கொண்டு, “இவனை அடிக்காதே.. திட்டாதே” என்பது போலத் தாயைத் தடுத்து நிறுத்திய அந்த நாயின் செய்கை பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த க்யூட் வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், மேலும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து நாயின்  பாசத்திற்கும் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.