ஆன்லைன் பைக் டாக்ஸி சேவையான ராபிடோவில் பயணம் செய்த இளம்பெண் ஒருவருக்கு, அந்த பைக் ஓட்டுநரே பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைக் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அந்த ஓட்டுநர் தனது முதுகில் அரிப்பு எடுப்பதாகவும், முதுகு வலிப்பதாகவும் கூறி அந்தப் பெண்ணிடம் உதவி கேட்டுள்ளார்.

ஆனால், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, முதுகை சொறிந்து விடுவது போல அந்தப் பெண்ணின் உடல் பாகங்களை மீண்டும் மீண்டும் தவறான முறையில் தொட்டு அத்துமீறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mo (@mo.of.everything)

அந்த ஓட்டுநரின் செய்கையால் அதிர்ச்சியடைந்த பெண், உடனே தனது செல்போனில் அவனது அநாகரிகச் செயலைப் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், “பெண்கள் இது போன்ற பைக் சேவைகளில் பயணிப்பது பாதுகாப்பானதா?” என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ராபிடோ ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.