அகமதாபாத்தில் இந்திய அணியைச் சுருட்டிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி, தனது வெற்றிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். 2018-ல் சிஎஸ்கே அணியில் இருந்தபோது ஜாம்பவான் பிராவோவிடம் கற்றுக்கொண்ட ‘ஸ்லோ பால்’ மற்றும் ‘ஸ்லோ யார்க்கர்’ நுட்பங்களே இந்திய வீரர்களை ரன் எடுக்க விடாமல் கட்டிப்போட உதவியதாக அவர் கூறியுள்ளார்.

​”அன்று பெஞ்சில் அமர்ந்திருந்த நேரத்தில் வீணாக்காமல் பயிற்சி செய்த வித்தைகள் தான் இன்று கை கொடுத்தன” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே பாசறையில் வளர்ந்த ஒரு வீரர், அதே வித்தையை வைத்து இந்திய அணியையே சாய்த்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.