டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இந்தியா இன்னும் தனது ‘பெஸ்ட்’ ஃபார்மில் இருப்பதாகக் கூறியுள்ளார். “சொந்த மண்ணில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தான் உலகின் சிறந்த டி20 அணி; அவர்கள் நிச்சயம் இறுதிப்போட்டிக்கு வருவார்கள்” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

​இந்தியாவின் அடுத்த சவால் பிப்ரவரி 26-ல் சென்னையில் ஜிம்பாப்வேயுடன் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கும் கிளார்க், மார்ச் 1-ல் கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிதான் மிகவும் சவாலாகவும், அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிப்பதாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.