அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில், இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்த இளம் வீரர் அபிஷேக் சர்மா, இந்தப் போட்டியில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளார்.
இதனால் சமூக வலைதளங்களில் அவர் கடுமையான விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளாகி வருகிறார். இதற்கிடையில், போட்டியின் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அபிஷேக் சர்மாவை பேருந்தில் வைத்து கடுமையாகக் கண்டிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இந்திய அணிக்குள் இருக்கும் பதற்றத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
அபிஷேக் சர்மாவின் இந்த மோசமான ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், அவர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நேரடியான அறிவுரையை வழங்கியுள்ளார். “அபிஷேக் எடுத்தவுடனேயே சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க முயற்சி செய்யக்கூடாது; முதலில் களத்தில் நேரத்தைச் செலவிட்டு நிதானமாக ஆட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
Gautam Gambhir started coaching Abhishek Sharma right there on the team bus. But sir, please stop this show in front of the cameras. You should have learned from Rohit Sharma how to explain things to a player, how to build their confidence, and how to bring out their best… pic.twitter.com/MmBKCRqY6d
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) February 23, 2026
“>
சிவம் துபே மட்டுமே இந்தப் போட்டியில் 42 ரன்கள் எடுத்து ஓரளவு தாக்குப்பிடித்த நிலையில், மற்ற இந்திய பேட்டர்கள் சொதப்பியது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
