தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சசிகலாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியலில் ஒரு முக்கியமான திருப்பத்தை நோக்கிச் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் பேசினார்.

புதிய கட்சித் தொடங்குவது குறித்த கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காத சசிகலா, நேற்று பசும்பொன்னில் நடைபெறவுள்ள ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சில முக்கிய முடிவுகளை எடுக்கப்போவதாகத் தெரிவித்தார்.

“இன்று நல்ல தகவலைச் சொல்கிறேன், அனைவரும் கலந்துகொள்ளுங்கள்” என்று அவர் கூறியிருப்பது, இன்று அவர் புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.