தென்னிந்தியத் திரையுலகின் டார்லிங் ஜோடிகளாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான காதல் கிசுகிசுக்களுக்கு தற்போது ஒரு வழியாக முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இவர்களது திருமணம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ‘VIROSH’ என்ற பெயரிலேயே, “தி வெடிங் ஆஃப் விரோஷ்” (The Wedding of VIROSH) எனத் தங்களது திருமணத்திற்குப் பெயரிட்டு இவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். திருமண வேலைகள் களைகட்டியுள்ள சூழலில், இன்று காலையே விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் தங்கள் குடும்பத்தினருடன் உதய்பூர் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினர்.
அங்கு கருப்பு மற்றும் நீல நிற கோட் சூட்களில் இருவரும் செம ஸ்டைலாக வந்த வீடியோவும் புகைப்படங்களும் தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பிற்காக சர்வதேச ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்தை முடித்துவிட்டு மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் திரைத்துறையினருக்காகப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் இந்த ஜோடி திட்டமிட்டுள்ளது.
