வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது, தலைவர் விஜய் தனது காரில் ஒரு அதிரடி மாற்றத்தைச் செய்தார். வழக்கமாகப் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் அவர், திடீரென தனது காரை நடுவழியில் நிறுத்தச் சொன்னார். கார் நின்றவுடன், அவரது பாதுகாப்புக்காகக் காரில் இருந்த பாதுகாவலர் கீழே இறங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக விஜய் சட்டென்று காரின் முன் இருக்கைக்கு (Front Seat) மாறி அமர்ந்து கொண்டார்.

​முன் இருக்கையில் அமர்ந்த வேகத்தில் கார் அங்கிருந்து புறப்பட, கீழே இறங்கிய ஒரு பாதுகாவலர் காருக்குள் ஏறுவதற்கு முன்பே கார் வேகம் எடுத்தது. இதனால் அந்தப் பாதுகாவலர் பாதி வழியிலேயே விடப்பட்ட ஒரு பரிதாபகரமான சூழல் ஏற்பட்டது. பின்னர் அவர் மற்றொரு வாகனத்தில் ஏறிச் செல்ல வேண்டியதாயிற்று. தலைவரின் இந்தத் திடீர் முடிவும், பாதுகாவலர் திணறிய அந்தத் தருணமும் வேலூர் சாலைகளில் சென்றவர்களிடையே பெரும் பரபரப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது.