வேலூரில் திரண்டிருந்த கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்திற்கு இடையே விஜய்யின் கார் ஒரு கட்டத்தில் நகர முடியாமல் முடங்கிப் போனது. எங்கு பார்த்தாலும் தொண்டர்களின் தலைகளாகத் தெரிந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் விரைவாக மண்டபத்தை அடையவும் விஜய் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். தனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு, கீழே இறங்கி அங்கிருந்த ஒரு சாதாரண வேனுக்கு மாறினார்.
அதிகளவில் கூடிய கூட்டம்… காரில் இருந்து இறங்கி திடீரென வேனுக்கு மாறிய விஜய்..!#TVKVijay | #TVK | #TVKMeeting | #Vellore | #Gollamangalam | #தவெக | #தமிழகவெற்றிக்கழகம் | #விஜய் | #PolimerNews pic.twitter.com/Ko1G2kkEsr
— Polimer News (@polimernews) February 23, 2026
எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அந்த வேனின் முன்பக்க இருக்கையிலேயே (Front Seat) விஜய் அமர்ந்து கொண்டார். கார் கண்ணாடியால் மறைக்கப்படாமல், முன்பக்கம் அமர்ந்து வந்த விஜய்யைத் தெளிவாகப் பார்த்த தொண்டர்கள் குஷியாகி கோஷமிட்டனர். மிகவும் நெருக்கடியான அந்தச் சூழலில், காரை விட்டு இறங்கி வேனின் முன் இருக்கைக்கு விஜய் மாறிய அந்தப் பரபரப்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
