ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் விறுவிறுப்பான லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, நேற்று (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இன்றைய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் இன்று (பிப்ரவரி 22) பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரில் இந்தியத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்துக் கவலைப்படுபவர்களை நினைத்துதான் தான் கவலைப்படுவதாகக் கூறிய அவர், வீரர் மீது முழு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.

முக்கியமான சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி, தனது வெற்றிப் பயணத்தைத் தொடரத் தீவிரமாகத் தயாராகி வருகிறது.