தமிழகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த ஒப்பந்த செவிலியர்களுக்கு 6 மாத காலத்திற்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.
இது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த அறிவிப்பு செவிலியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
