அதிமுக-வின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், அக்கட்சியிலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லோகேஷ், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியிலும் (IT Wing) முக்கியப் பொறுப்பு வகித்தவர். அவரது தந்தை தனபால் தற்போது அதிமுக எம்.எல்.ஏ-வாக (அவினாசி) உள்ள நிலையில், லோகேஷ் எடுத்துள்ள இந்தத் திடீர் முடிவு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.