உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில், ஏற்கனவே காதலித்து ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்துகொண்ட சுமித் – தனு ஜோடிக்கு, முறைப்படி குடும்பத்தினர் முன்னிலையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன.

அதிகாலை நேரத்தில் நகைகள் வழங்கும் சடங்கு நடந்தபோது, மணமகள் வீட்டின் செல்ல நாய் ‘சிக்ஸர்’ விடாமல் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் அந்த நாயை அடிக்க, அது இரு குடும்பத்தாருக்கும் இடையே பெரிய மோதலாக வெடித்தது.

இந்த மோதலில் நாற்காலிகள் மற்றும் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், மணமகள் உட்பட 8 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. “விலங்குகளிடம் கருணை காட்டாத குடும்பத்தில் என்னால் வாழ முடியாது” என்று கூறி மணமகள் அந்தத் திருமணத்தை அதிரடியாக நிறுத்தினார்.

இறுதியில், போலீசார் முன்னிலையில் இரு வீட்டாரும் சீர் வரிசைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சமரசமாகப் பிரிந்து சென்றனர்.