வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்லும் போது தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் வசதிகளை நாம் எவ்வளவு நம்பிக்கையுடன் பயன்படுத்துகிறோம்? ஆனால், ஒரு டிராவல் இன்ஃப்ளூயன்ஸர் (Travel Influencer) செய்த காரியம் இப்போது ஹோட்டல் காபி குடிப்பவர்களையே வாந்தி எடுக்க வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் தனக்குத் தேவையான உள்ளாடைகள் தீர்ந்துவிட்டதால், ஹோட்டல் அறையில் இருக்கும் காபி மேக்கரை (Coffee Maker) வைத்து ஒரு விசித்திரமான ‘டிப்ஸ்’ கொடுத்துள்ளார்.
காபி தூள் போடும் இடத்தில் தனது உள்ளாடையை வைத்து, மெஷினை ஆன் செய்து சுடுநீரை ஓடவிட்டுத் துவைப்பதைக் கண்டு இணையமே கொந்தளித்துப் போயுள்ளது.
🚨 TRAVEL INFLUENCER SPARKS OUTRAGE AFTER REVEALING WHAT SHE DOES WITH HOTEL COFFEE MAKERS
A health influencer’s video is going viral after she admitted that when she runs out of underwear, she puts them inside the hotel coffee machine, hits brew, and lets boiling water run… pic.twitter.com/vQEghRY27q
— HustleBitch (@HustleBitch_) February 19, 2026
“இது பலருக்கும் தெரிந்த பழைய டிரிக் தான்” என்று அந்தப் பெண் சாதாரணமாகக் கூறினாலும், இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இனிமேல் ஹோட்டல்களில் காபி குடிக்கவே பயமாக இருக்கிறது, இது எவ்வளவு பெரிய சுகாதாரக் கேடு!” என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.
“அடுத்ததாக அந்தப் அறையில் தங்கும் பயணிகள் அதே மெஷினில் காபி போட்டு குடிப்பார்கள் என்பதை அந்தப் பெண் யோசிக்கவே இல்லையா?” என்று சமூக அக்கறையற்ற அவரது செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியானதில் இருந்து ஹோட்டல் அறைகளில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விவாதம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
