வாரணாசியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘கன்கால் ஹாரர் ரெஸ்டாரன்ட்’ (Kankal Horror Restaurant) தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக ரயில், விமானம் போன்ற தீம்களில் உணவகங்கள் வருவதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த உணவகம் முழுவதும் பேய்கள், எலும்புக்கூடுகள் மற்றும் திகிலூட்டும் உருவங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்குப் பேய் வேடமிட்ட ஊழியர்கள் தான் உணவைப் பரிமாறுகிறார்கள். இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில், உணவருந்த அமர்ந்திருக்கும் பெண்களிடம் பேய் வேடமிட்ட நபர் கைகுலுக்க முயல்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஒரு பெண் பயத்தில் கதறி அழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சுமார் 7 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “சாப்பிட வர்றாங்களா இல்ல பயந்து சாக வர்றாங்களா?” என்று கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் இது சுவாரஸ்யமாக இருப்பதாகக் கூறினாலும், இன்னும் சிலர் “தனியாக இங்கு போனால் பசி அடங்கி பயம் தான் வரும்” என்று பதிவிட்டு வருகின்றனர்.
