மலையாளத் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஷெபிக், கொச்சியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதற்காகக் கலால் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாகுளம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கலால் துறையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, ஷெபிக்கின் கார் சோதனையிடப்பட்டது.
அதில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 52 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் 58 பீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ‘ஆக்ஷன் ஹீரோ பிஜூ’ மற்றும் ‘ஆட்டோர்ஷா’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், இரவு நேரங்களில் மது தேவைப்படுபவர்களுக்குத் தனது கார் மூலமாக ரகசியமாகச் சப்ளை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் மலப்புறம் மாவட்டம் திருரங்காடியைச் சேர்ந்த ஷெபிக், சமூக வலைதளங்களில் வைரலான ஒரு புகைப்படத்தின் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், திரையுலகில் பணியாற்றி வந்த அதே வேளையில், ரகசிய தொழில் அம்பலம்ரகசிய மது விநியோக நெட்வொர்க்கையும் அவர் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் மது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அவரது காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நள்ளிரவில் வாடிக்கையாளர்களைத் தேடிச் சென்று மது விநியோகிக்கும் இவரின் இந்தச் சட்டவிரோதச் செயல், தற்போது கொச்சி திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
