நாம் பொதுவாக பழையதாகிவிட்ட அல்லது கிழிந்துவிட்ட சட்டைகளைத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், தற்போது உலக அளவில் என்ற பெயரில் கிழிந்த மற்றும் அழுக்கான தோற்றம் கொண்ட ஆடைகள் பெரும் ட்ரெண்டாகி வருகின்றன. சமீபத்தில் பிரபல சொகுசு பிராண்ட் ஒன்று, பார்ப்பதற்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஒரு சட்டையை சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

மேலும் ஆச்சரியம் என்னவென்றால், பெரும் பணக்காரர்கள் இந்த சட்டையை மிகவும் ஆர்வத்துடன் வாங்கி, ஸ்டைலாக அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சாதாரண மக்கள் குப்பையில் வீசக்கூடிய ஒரு பொருளை, பெரும் செல்வந்தர்கள் தங்களின் அந்தஸ்தைக் காட்டும் ஒரு அடையாளமாகப் பார்ப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் “இது பேஷனா அல்லது பைத்தியக்காரத்தனமா?” என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பினாலும், இந்த வினோத பேஷன் ஆடைகளுக்கான மவுசு குறைந்தபாடில்லை. சாதாரண கந்தல் துணி போலத் தோற்றமளிக்கும் இந்த உடைகள், இன்று சர்வதேச சந்தையில் மிக உயர்ந்த விலைக்கு விற்கப்படுவது தற்போதைய காலத்தின் விசித்திரமான நுகர்வோர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது.