பீகார் மாநில துணை முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான சாம்ராட் சவுத்ரி சட்டசபையில் அமர்ந்து கொண்டு புகையிலை தயாரிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்து மாநிலத்தின் கௌரவம் சட்டசபைக்குள் சீர்குலைக்கப்படுவதாகக் கடுமையாகச் சாடியுள்ளது.

 

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஆளும் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை, காங்கிரஸ் கட்சி மக்கள் பிரச்சனைகளைப் பேசாமல் இது போன்ற தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதாகவும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் அதிகாரிகளைத் தரம் தாழ்ந்து நடத்தியதை விட இது பெரிய குற்றமல்ல என்றும் தெரிவித்துள்ளன.

தேர்தல் நெருங்கும் வேளையில் சட்டமன்ற மாண்பு குறித்த இந்தப் புகையிலை விவகாரம் பீகார் அரசியலில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதத்தை உருவாக்கியுள்ளது.