”விஜய் மாநாட்டுல சாவு விழுந்தா அது நல்ல சகுனம்”னு நயினார் நாகேந்திரன் சொன்னது இப்போ தமிழக அரசியல்ல காட்டுத்தீயாய் பரவிக்கிட்டு இருக்கு. இதைக் கேட்ட தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் சும்மா இருப்பாரா? அவரோட எக்ஸ் (X) பக்கத்துல இறங்கி அடிச்சிருக்காரு. “அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறி விட்ட கமலாலய கள்ளக் கூட்டணி தலைவருக்கு கண்டனம்”னு நயினாரை பார்த்து நேரடியாவே கேட்டுட்டாரு.
”மரணத்துல கூட அரசியல் லாபம் தேடுற இந்த மனநிலை ரொம்ப அருவருக்கத்தக்கது”னு நாஞ்சில் சம்பத் சொன்னது இப்போ சோசியல் மீடியால டிரெண்டிங். நயினார் பேசுறது மனிதாபிமானமே இல்லாத ஒரு பேச்சுன்னு தவெக தொண்டர்கள் கொந்தளிச்சு போய் இருக்காங்க. ஏற்கனவே த்ரிஷா மேட்டர்ல சிக்கி இருந்த நயினாருக்கு, இப்போ நாஞ்சில் சம்பத்தோட இந்த வார்த்தை ஏவுகணைகள் பெரிய தலைவலியை கொடுத்திருக்கு.
