2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா துவம்சம் செய்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் பாகிஸ்தான் அணியை நக்கலாக விமர்சித்துள்ளது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “இந்த மேட்ச் ஒரு இ-மெயிலிலேயே முடிந்திருக்கலாம்” என கூகுள் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது, எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லாமல் ஒருதலைப்பட்சமாக முடிந்த போட்டியை கூகுள் இப்படி ‘ட்ரோல்’ செய்துள்ளது. இதற்கிடையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தேதிகள் மாறுகின்றன, ஆனால் முடிவு மாறவே இல்லை” என இந்தியாவின் தொடர் வெற்றியைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
This match could’ve been an email 🤭
— Google India (@GoogleIndia) February 15, 2026
இந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான், வெறும் 114 ரன்களுக்கு சுருண்டு 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இது டி20 வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். ஆட்டத்தின் இடையே கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி தொடரில் நீடிக்க முடியுமா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
