டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஹை-வோல்டேஜ் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால், ஆட்டத்தை விட பிசிசிஐ-யின் ‘நோ ஹேண்ட்ஷேக்’ (கை குலுக்கக் கூடாது) பாலிசி தான் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவுக்கு கை கொடுக்க மறுத்தது மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. “நாங்கள் கிரிக்கெட் விளையாட வந்துள்ளோம், மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம், இப்போதைக்கு நல்லா சாப்பிட்டு தூங்குங்க” என சூர்யகுமார் யாதவ் நிருபர்களிடம் நக்கலாக பேசியது வைரலாகி வருகிறது.

​இன்னொரு பக்கம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, பாகிஸ்தான் ஜாம்பவான் வசிம் அக்ரமை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து தனது நட்பை வெளிப்படுத்தினார். பிசிசிஐ-யின் கட்டுப்பாடுகளை ரோஹித் சர்மா கண்டுகொள்ளாமல் செயல்பட்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடி 77 ரன்கள் உதவியுடன் 175 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. வெற்றியைக் கொண்டாடுவதை விட, இந்த ‘ஹேண்ட்ஷேக்’ விவகாரம் தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே காரசாரமான விவாதமாக மாறியுள்ளது.