தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், த்ரிஷாவிடமிருந்து வெளியே வந்தால்தான் எல்லாம் நடக்கும் என்றும் அவர் பேசியது நாகரிகமற்றது எனப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பெண்களின் மாண்பைக் குறைக்கும் வகையில் பொதுவெளியில் பேசிய நயினார் நாகேந்திரன், இதற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சுதா நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்துள்ளார். திராவிட இயக்கத்தில் இருந்தபோது பெண் உரிமை பேசியவர், தற்போது பாஜகவின் சித்தாந்தத்தால் பெண்களை இழிவாகப் பேசுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஒரு கட்சியின் தலைவரிடம் இருந்து உயர்வான சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது என்றும், இனிமேலாவது மற்றவர்களை இழிவாகப் பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.