சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
அதில் முக்கியமாக, ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு வட்டியில்லாத சுயதொழில் கடன் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
மேலும், முதியோர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
