சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் உள்ள நார்தா கிராமத்தில் அமைந்துள்ள ருக்நாத் தாம் கோயிலில், பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சந்திரஹாஷ் கிரி கோஸ்வாமி நடத்திய தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள கோயிலில் பிப்ரவரி 16-ம் தேதி ருத்ர மகாயாகம் நடத்த அந்த பாஜக பிரமுகர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக ஊர் மக்களிடமும், கடைக்காரர்களிடமும் கட்டாய வசூலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எந்த வசூலும் இன்றி நடந்த இந்த யாகத்திற்கு, இப்போது ஏன் பணம் கேட்கிறீர்கள் என எதிர்ப்புத் தெரிவித்த பூசாரியின் சகோதரரை அந்த பாஜக பிரமுகர் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
भाजपा नेता द्वारा मंदिर के पुजारी को लात घुसों से पीटा गया
पिटाई का कारण है कि भाजपा नेता मंदिर में पूजा/यज्ञ के नाम पर श्रद्धालुओं से जबरदस्ती चन्दा वसूल रहा थाबस इसी का विरोध मंदिर के पुजारी ने किया,
पुजारी ने कहा इस तरह धर्म के नाम पर चंदा चोरी करना ठीक नहीं है बस बीजेपी… pic.twitter.com/tYaKYL5W4X— Shailesh Verma (@shaileshvermasp) February 14, 2026
கோயில் வளாகத்திலேயே வைத்து அந்த இளைஞரின் தலை மற்றும் வயிற்றில் எட்டி உதைத்ததோடு, சைக்கிளுக்குக் காற்று அடிக்கும் பம்ப்பால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த மொத்தக் கூத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, சுதாரித்துக் கொண்ட அந்த பாஜக பிரமுகர், தனக்கே காயம் ஏற்பட்டது போல நாடகமாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பூசாரி தரப்பும் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி ஆதாரங்கள் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு புனிதமான கோயில் வளாகத்தில் அரசியல் செல்வாக்கை வைத்து நடந்த இந்த அராஜகம் பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
