இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு இன்று (பிப்.15) முதல் ஒரு அதிர்ச்சியான செய்தியை அமல்படுத்தியுள்ளது. இனி ஆன்லைன் மூலம் (Internet Banking, Mobile Banking, YONO App) செய்யப்படும் IMPS பணப்பரிவர்த்தனைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் இலவசம் கிடையாது. இதுவரை ரூ. 5 லட்சம் வரை இலவசமாக இருந்த இந்தச் சேவைக்கு, இப்போது புதிய கட்டண முறையை வங்கி அறிவித்துள்ளது.

​புதிய விதிகளின்படி, ரூ. 25,000 வரை செய்யப்படும் பரிவர்த்தனைகள் எப்போதும் போல இலவசமாகத் தொடரும். ஆனால், ரூ. 25,001 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான பணப் பரிமாற்றத்திற்கு ரூ. 2 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதேபோல், ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை ரூ. 6 + ஜிஎஸ்டி-யும், ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான பெரிய தொகைகளுக்கு ரூ. 10 மற்றும் ஜிஎஸ்டி-யும் கட்டணமாக வசூலிக்கப்படும். வங்கியில் நேரடி சேவை (Branch channel) மூலம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.