மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டி என்பவர், தமிழக அரசு மகளிருக்கு வழங்கிய ₹5,000 உதவித்தொகையை அப்படியே முதலமைச்சருக்கே திருப்பி அனுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது மனைவியின் ஒப்புதலுடன், போஸ்ட் ஆபீஸ் மூலம் இந்தத் தொகையை முதல்வர் முகவரிக்கு அனுப்பிய அவர், இது “ஓட்டுக்காகக் கொடுக்கப்பட்ட பணம்” என்று பகிரங்கமாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “ஏற்கனவே தமிழக அரசு கடும் கடன் சுமையில் இருக்கும் நிலையில், எனது பங்களிப்பாக இந்தப் பணம் இருக்கட்டும்” என்று அவர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் வேளையில், அரசின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி, வழங்கப்பட்ட பணத்தை ஒரு சாதாரண குடிமகன் திருப்பி அனுப்பியது திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. “மக்கள் வரிப்பணத்தை இப்படித் தான் செலவு செய்கிறார்களா?” என்ற கேள்வியை சங்கரபாண்டி முன்வைத்திருப்பது, எதிர்க்கட்சிகளுக்குப் புதிய ஆயுதத்தைக் கொடுத்தது போல் அமைந்துள்ளது. இந்தச் சம்பவம் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இப்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
