கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலின் 4-வது மாடியில் இருந்து 20 வயது இளம் பெண் குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹோட்டல் அறையில் தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஆத்திரத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, அந்தப் பெண்ணின் ஆண் நண்பரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

மேலும் முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தப் பெண் மாடியிலிருந்து குதித்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்றும், மன உளைச்சலில் இருப்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.