தமிழக அரசியலில் கட்சிகளைப் பிரித்து குளிர் காய்வதுதான் திமுகவின் வேலை என்றும், அந்தப் பயத்தினால்தான் திருமாவளவன் தற்போது அமைதியாக இருக்கிறார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராகக் கம்யூனிஸ்டுகள் போர்க்குரல் எழுப்ப வேண்டியது அவர்களின் கடமை என்று சுட்டிக்காட்டிய அவர், இட ஒதுக்கீடு மற்றும் தொகுதிகளுக்காகக் கம்யூனிஸ்டுகள் மௌனம் சாதிப்பது சரியல்ல என்றும் சாடியுள்ளார்.

​வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் “ரியல் ஹீரோ” எடப்பாடி பழனிசாமிதான் என்று குறிப்பிட்ட அவர், மக்களின் ஆதரவுடன் அவர்தான் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் எனத் திட்டவட்டமாகக் கூறினார். திமுகவின் தந்திரங்களுக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும், எடப்பாடியாரின் தலைமையிலான அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கோட்டையைக் கைப்பற்றும் என்றும் செல்லூர் ராஜு தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.