தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்வது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார். அப்போது நாட்டு மக்களுக்கு இதுவரை என்ன நடந்தது என்பது குறித்து அவர் விரிவாக எடுத்துரைப்பார் என்றும் கூறினார்.
மேலும், சேலத்தில் நடைபெறவுள்ள கட்சியின் நிகழ்ச்சி ஒரு வரலாற்றுச் சாதனையாக அமையும் என்றும், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி திமுகவை வீழ்த்த விஜயால் மட்டுமே முடியும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு கருதி, கட்சியின் கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதே சமயம், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வருவதைத் தவிர்த்து, காவல்துறையின் அறிவுறுத்தலின்படி தொலைக்காட்சியில் நேரலையாக நிகழ்ச்சியைக் கண்டு மகிழுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
