தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக மறுத்துள்ளார். “விஜய் கூறுவதையெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை” என்று கூறியுள்ள அவர், சினிமாவில் விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் அரசியலில் அவர் இன்னும் ஒரு கத்துக்குட்டிதான் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் கூட படிப்படியாக வளர்ந்துதான் முதலமைச்சர் ஆனார்கள் என்பதைக் குறிப்பிட்ட அவர், ஒரு தேர்தலைச் சந்திக்காமல் விஜய்யின் பலத்தை எடை போட முடியாது எனத் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை அதிமுக-வுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். “யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறியதன் மூலம், அதிமுக-வின் நேரடிப் போட்டி திமுக-வுடன் தான் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.